Posts

🌷🌷*சாதி வெறியர்களுக்கான ஒரு சவுக்கடி கவிதை, சுகிர்தராணி அவர்களிடமிருந்து!*🌸

🍀 *தற்கொலை செய்து கொள்!*  நாங்கள் *சமையலராக* இருக்கிறோம். நாங்கள் சமைத்த உணவுஉனக்கு வேண்டாமெனில்… நாங்கள் *மருத்துவராக*  இருக்கிறோமே உனக்கு நீயே வைத்தியம் செய்துகொள்... *செவிலியராக* இருக்கிறோம். உன் பிரசவத்தைநீயே பார்த்துக் கொள்... *பிணத்தை எரிப்பவராக* இருக்கிறோம் உன் பிணத்தைநீயே எரித்துக் கொள்... *பொறியாளராக* இருக்கிறோம். உன் கட்டடத்தை நீயே கட்டிக் கொள்... *வழக்கறிஞராக* இருக்கிறோம். உனக்கு நீயே வாதாடிக் கொள்... *முடி வெட்டுபவராக* இருக்கிறோம். உன் மயிரை நீயே வெட்டிக் கொள்... *ஆசிரியராக* இருக்கிறோம் உன் பிள்ளைகளுக்கு நீயே சொல்லிக்கொடு... *ஓட்டுநராக* இருக்கிறோம். உன் போக்குவரத்தைநீயே பார்த்துக் கொள்... *கூலிகளாய்* இருக்கிறோம். உன் சுமைகளை நீயே தூக்கிக் கொள்..  *மலம் அள்ளுபவராக* இருக்கிறோம். உன் மலத்தை நீயே அள்ளிக் கொள்... *சாக்கடை வாருபவராக* இருக்கிறோம். உன் சாக்கடையை நீயே வாரிக் கொள்... *கலப்புமணம் புரிந்தவராக* இருக்கிறோம். உன்னையே நீ புணர்ந்துகொள்... நாங்கள் *அரசியலமைப்புச் சட்டத்தை* எழுதியவராக இருக்கிறோம்... *இதுவும் உனக்கு வேண்டாமெனில், தயவுசெய்து தற்கொலை செய்துகொள்.*...

சர்வதேச சமூகத்திற்கு எதிரியாக மாறும் சலூன் கடைகள்..? அமெரிக்காவில் 50% பாதிப்புக்கு காரணம் சலூன்கள்

Image
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரழிவுகளை ஏற்படுத்திவருகிறது. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவில் தான் கோர தாண்டவம் ஆடியுள்ளது. உலகளவில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் 7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் சமூக தொற்றாக பரவிவிட்டதால் அங்கு பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கும் பேரிழப்பு. இந்தியாவில் 14 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.450 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அபாயகரமான தொற்று நோய் என்பதால், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும் சமூக விலகலுமே முக்கியம் என்பதால், பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு கொரோனாவை தடுக்க போராடிவருகின்றன. கொரோனா தொற்றுள்ளவரிடமிருந்து தும்மல், இருமல் மூலமான வெளிவரும் எச்சில் மூலமாகவோ, கொரோனா தொற்றுள்ளவர்கள் தொட்ட பொருட்களை தொட்டு, அப்படியே மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளில் வைப்பதன் மூலமாகவோ என அந்த தொற்றுள்ளவரிட...

17/04/2020அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் என்றால் என்ன? எப்படி பதிவு செய்வது ? விரிவான விளக்கம்

Image
17/04/2020 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் என்றால் என்ன? எப்படி பதிவு செய்வது ? விரிவான விளக்கம் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் என்பது இந்தியாவில் உள்ள  அமைப்பு சாரா தொழிலாளர்களின் (Unorganised Workers) சமூக பாதுகாப்புக்காக மத்திய மாநில அரசால் செயல்படுத்தப்படும் நல வாரியங்கள் (Welfare Board) ஆகும். தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவராணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் கீழ்கண்ட நலவாரியங்களை உள்ளடக்கியது. விவசாயத் தொழிலாளர் நலவாரியம் மீனவர் நலவாரியம் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சீர்மரபினர் நலவாரியம்...

✍✍நாம் ஏன் மருத்துவர்?✍✍

✍🏻✍🏻 *நாம் ஏன் மருத்துவர்?*✍ நண்பன் ஒருவன் கேட்டான் நான் என்ன சாதியென்றே! நலமாய் நான் உரைத்தேன் நாங்களெல்லாம் மருத்துவரே! குழப்பமாய் அவன் கேட்டான் குலம் மருத்துவரா என்று? கூறினேன் நான் ஆம் என்றே! மருத்துவரென்றால் மருத்துவம் பார்ப்பவரே! மயிர் மழிக்கும் தொழில்செய்வோர் அம்பட்டர் ஆவாரே? ஆணவமாய் அவன் உரைத்தான்! மண்ணாங்கட்டி அவன் மூளை மதியின்றி கேட்கின்றான் மதியுள்ள மருத்துவன் நான் மாண்புடனே எடுத்துரைத்தேன்! நோய்தீர்க்கும் *மருத்துவனாய்* ஆய்ந்தறியும் *சோதிடனாய்* அறிவு புகட்டும் *பண்டிதனாய்* நாவிசைக்கும் *நாவிதனாய்* பரிகாரம் செய்த *பரிகாரியாய்* பல துறைகள் தெரிந்தாலும் ஐந்தொழில்கள் ஆற்றியதால் ஐம்பட்டர் ஆனோமே! ஐந்தறிவு ஜீவன்களோ அம்பட்டன் என்றழைப்பார்! மருத்துவம் செய்யாதவன் மருத்துவரா?  மறுபடியும் அவன் கேள்வி! களவு தொழில் செய்வதில்லை கள்ளர் என்கின்றார்! மற வீரம் போர் இல்லை மறவர் நான் என்கின்றார்! அகம் காக்கும் தொழில் இல்லை அகமுடையார் என்கின்றார்! நாடாத குணமில்லை நாடார் நான் என்கின்றார்! கெட்டியாய் தொழில் இல்லை வட்டிக்கு விடுவதில்லை செட்டியார் என்கின்றார்! தேவன் குணம் இல்லாதோர் தேவர் நான் எ...

முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாநாட்டில் மாண்புமிகு பேராசிரியர் திரு.க.அன்பழகன் அவர்களின் உரை

Image
10 10 2000 ஆண்டு தமிழ்நாடு முடிதிருத்துவோர் நல சங்கத்தின் சார்பாக முதல் மாநில மாநாடு மரியாதைக்குரிய மாநில தலைவர் ஐயா திரு.M.நடேசன் அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் சென்னியவிடுதி திரு.C.வைத்தியநாதன் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார். அந்தக் கூட்டத்திலேயே மரியாதைக்குரிய மாநில அமைச்சர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள் அந்தக் கூட்டத்தில் "மரியாதைக்குரிய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்து கொள்வார்கள்" என்று நாம் அறிவித்திருந்தோம். அந்த வகையில் அந்தக் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. மரியாதைக்குரிய  இனமான பேராசிரியர் கல்வி அமைச்சர் மான்புமிகு திரு.க.அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய அந்த உரை மறுநாள் முரசொலி பத்திரிக்கையில் வந்தது. அந்த பதிவின் மறுபதிப்பாக அக்டோபர் 2000ஆம் ஆண்டு  நமது சமுதாய மடல் பத்திரிக்கையில் வந்ததை இங்கே நான் பதிவு செய்கின்றேன்.  நன்றியுடன்  புதுக்கோட்டை M.A.பாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம்...

வேதாரணியம் தியாகி திரு.க.வைரப்பன் அவர்களின் வரலாறு.

Image
1930ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழ் வருஷப் பிறப்பு நாள் அன்று, திருச்சியில் டாக்டர் டி எஸ் ராஜன் அவர்கள் இல்லத்தில் இருந்து, மரியாதைக்குரிய ராஜாஜி அவர்கள் தலைமையில், சுமார் 100 தொண்டர்கள் கிளம்பி 15 நாட்கள் நடை பயணம் செய்து வேதாரணியம் சென்றடைந்து, அங்கே அகஸ்தியம்பள்ளி என்னும் இடத்தில், உப்பு எடுத்து, மகாத்மா காந்தியடிகள் தண்டியில் செய்த உப்பு சத்தியாகிரகத்தை, இங்கே, தமிழ்நாட்டில் அரங்கேற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் மரியாதைக்குரிய ராஜாஜி அவர்கள், மரியாதைக்குரிய சந்தானம் அவர்கள், மரியாதைக்குரிய சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்கள், உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும், தொண்டர்களும் போலீஸ் அடக்குமுறைக்கு ஆளாகி அடிபட்டு, உதைபட்டு, சிறை சென்று, செய்த தியாகம் வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பெரிய பெரிய அரசியல் கட்சி தலைவர்கள், பெரிய மிராசுதாரர்கள், இவர்களெல்லாம் உப்பு சத்தியாகிரகப் போர் நடத்தினார்கள் என்றால், சாதாரண பொதுமக்களும் நேரடியாக போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், தங்களுடைய சக்திக்கு உட்பட்டு ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அவ...

சுளுந்தீ’. ‘பண்டிதர்’ நிலையிலிருந்து ‘முண்டிதர்’ நிலைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய இந்த அரிய ‘ஆவண நாவல்’

Image
சுளுந்தீ’. ‘பண்டிதர்’ நிலையிலிருந்து ‘முண்டிதர்’ நிலைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய இந்த அரிய ‘ஆவண நாவல்’ தமிழுக்குக் கொடை. தமிழில் அம்+பட்டர் என்பதே ‘அம்பட்டர்’ ஆனது என ஒரு விளக்கம் உண்டு. உயர் சாதியினருக்கு மருத்துவம் பார்க்கையில் தீட்டினைத் தவிர்க்கும் பொருட்டு ‘அழகிய பட்டுத் துணியினை அவர்கள் கைமேல் அணிவித்து நாடி பார்த்ததால் இப்பெயர் வந்தது என்பர். ‘அம் பட்டு’ என்றால் அழகிய பட்டு. ஆனால் இவ்விளக்கம் பொருத்தமானதாகத் தோன்றவில்லை. இரணசிகிச்சை மற்றும் பிரசவத்தை எப்படி அணுகியிருப்பார்கள் என்கிற கேள்வி பிறக்கிறது. இன்று இழிசொல்லாக மாறியுள்ள ’அம்பட்டர்’ என்ற சொல்லின் உண்மைப் பொருளே வேறு. அது ‘அம்பா’ (பக்கம்), ஸ்தா (இருப்பவர்) ஆகிய இரு வடமொழி வேர்ச்சொற்கள் இணைந்து தன்னிடம் சவரம் செய்து கொள்பவர் அருகிலோ, மருத்துவர் பார்த்துக் கொள்பவர் அருகிலோ இருப்பவர் என்ற பொருளைத் தருவதாகும். மலையாள சவரத் தொழிலாளியான ‘காவுதியன்’ அருகிலிருப்பவர் எனும் பொருளில் ‘அடுத்தோன்’ என்று அழைக்கப்படுவது சான்று. வேதியர் தொழிலை உயர்வான தொழிலாக நிலைநிறுத்த இதரத் தொழில்களைக் கீழ்மைப்படுத்த வேண்டிய அவசியம...