கொரானா பற்றி திருவை குமரன் அவர்கள்
அடேய் தம்பிகளா? மூடிக்கிடக்கிறதப்பத்தி யே பேசிறீங்களே ... தொறந்துக்கிடக்கிறதப் பத்தி பேசமாட்டிங்களா? காய்கறி சந்தையில நகந்து நகந்துதான் நடக்க முடியுது.. சந்து பொந்தெல்லாம் கூட்டம் கூட்டமாக நின்னு கூத்து அடிக்கிறாக .. வீட்டு வாசல்ல... கும்பலா குந்திக்கிட்டு "கொரானாயாணம்.." கதாகலாட்ஷம் நடக்குது, சமூக இடைவெளியை தானே தளர்த்திக்கிட்டு ஹான்ஸ் கசக்கியும்... புகையைவிட்டும் இடைவெளியை நிறப்பது இளசுங்க.. தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் போட்டி போட்டுக்கிட்டு பேட்டிக் கொடுக்கிற விவாதிக்கிற கூட்டமெல்லாம் நீட்டா முகத்த மழிச்சி முடியை வெட்டி... தலையில கருமையை பூசிக்கிட்டு .. சலூன்லையும்.. வேண்டாம், வீட்டுக்கு வரச் சொல்லியும்.. வெட்டிக்காதீங்கன்னு .. அறிவுரை சொல்றாக.. அடேய் தம்பிகளா.... முதல்ல வூகான்ல... சொன்னாங்க.. பிறகு உலகமெல்லாமுன்னு சொன்னாங்க .. உயிரின்னு சொன்னாங்க .. உயிரி யில்லைன்னு சொன்னாங்க அப்புறம் வளருதுன்னு சொன்னாங்க. எதைத்தான் நம்புறது ... இதைவிட.. எப்படி உருவானதின்னு விவாதிங்க எப்படி இதுக்குமட்டும் மருந்துயில்லைன்னு சொல்றாங்கன்னு விவாதிங்க ... மருந்துயிருக்குன்னு சொன்னாலும் ...