Posts

Showing posts from April 17, 2020

17/04/2020அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் என்றால் என்ன? எப்படி பதிவு செய்வது ? விரிவான விளக்கம்

Image
17/04/2020 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் என்றால் என்ன? எப்படி பதிவு செய்வது ? விரிவான விளக்கம் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் என்பது இந்தியாவில் உள்ள  அமைப்பு சாரா தொழிலாளர்களின் (Unorganised Workers) சமூக பாதுகாப்புக்காக மத்திய மாநில அரசால் செயல்படுத்தப்படும் நல வாரியங்கள் (Welfare Board) ஆகும். தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவராணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் கீழ்கண்ட நலவாரியங்களை உள்ளடக்கியது. விவசாயத் தொழிலாளர் நலவாரியம் மீனவர் நலவாரியம் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சீர்மரபினர் நலவாரியம்...

✍✍நாம் ஏன் மருத்துவர்?✍✍

✍🏻✍🏻 *நாம் ஏன் மருத்துவர்?*✍ நண்பன் ஒருவன் கேட்டான் நான் என்ன சாதியென்றே! நலமாய் நான் உரைத்தேன் நாங்களெல்லாம் மருத்துவரே! குழப்பமாய் அவன் கேட்டான் குலம் மருத்துவரா என்று? கூறினேன் நான் ஆம் என்றே! மருத்துவரென்றால் மருத்துவம் பார்ப்பவரே! மயிர் மழிக்கும் தொழில்செய்வோர் அம்பட்டர் ஆவாரே? ஆணவமாய் அவன் உரைத்தான்! மண்ணாங்கட்டி அவன் மூளை மதியின்றி கேட்கின்றான் மதியுள்ள மருத்துவன் நான் மாண்புடனே எடுத்துரைத்தேன்! நோய்தீர்க்கும் *மருத்துவனாய்* ஆய்ந்தறியும் *சோதிடனாய்* அறிவு புகட்டும் *பண்டிதனாய்* நாவிசைக்கும் *நாவிதனாய்* பரிகாரம் செய்த *பரிகாரியாய்* பல துறைகள் தெரிந்தாலும் ஐந்தொழில்கள் ஆற்றியதால் ஐம்பட்டர் ஆனோமே! ஐந்தறிவு ஜீவன்களோ அம்பட்டன் என்றழைப்பார்! மருத்துவம் செய்யாதவன் மருத்துவரா?  மறுபடியும் அவன் கேள்வி! களவு தொழில் செய்வதில்லை கள்ளர் என்கின்றார்! மற வீரம் போர் இல்லை மறவர் நான் என்கின்றார்! அகம் காக்கும் தொழில் இல்லை அகமுடையார் என்கின்றார்! நாடாத குணமில்லை நாடார் நான் என்கின்றார்! கெட்டியாய் தொழில் இல்லை வட்டிக்கு விடுவதில்லை செட்டியார் என்கின்றார்! தேவன் குணம் இல்லாதோர் தேவர் நான் எ...

முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாநாட்டில் மாண்புமிகு பேராசிரியர் திரு.க.அன்பழகன் அவர்களின் உரை

Image
10 10 2000 ஆண்டு தமிழ்நாடு முடிதிருத்துவோர் நல சங்கத்தின் சார்பாக முதல் மாநில மாநாடு மரியாதைக்குரிய மாநில தலைவர் ஐயா திரு.M.நடேசன் அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் சென்னியவிடுதி திரு.C.வைத்தியநாதன் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார். அந்தக் கூட்டத்திலேயே மரியாதைக்குரிய மாநில அமைச்சர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள் அந்தக் கூட்டத்தில் "மரியாதைக்குரிய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்து கொள்வார்கள்" என்று நாம் அறிவித்திருந்தோம். அந்த வகையில் அந்தக் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. மரியாதைக்குரிய  இனமான பேராசிரியர் கல்வி அமைச்சர் மான்புமிகு திரு.க.அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய அந்த உரை மறுநாள் முரசொலி பத்திரிக்கையில் வந்தது. அந்த பதிவின் மறுபதிப்பாக அக்டோபர் 2000ஆம் ஆண்டு  நமது சமுதாய மடல் பத்திரிக்கையில் வந்ததை இங்கே நான் பதிவு செய்கின்றேன்.  நன்றியுடன்  புதுக்கோட்டை M.A.பாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம்...