22/5/2020. தியாகி வேதை க.வைரப்பன் அவர்களின் பிறந்த நாள்
1930 ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழ் வருஷப் பிறப்பு நாள் அன்று, திருச்சியில் டாக்டர் டி எஸ் ராஜன் அவர்கள் இல்லத்தில் இருந்து, மரியாதைக்குரிய ராஜாஜி அவர்கள் தலைமையில், சுமார் 100 தொண்டர்கள் கிளம்பி 15 நாட்கள் நடை பயணம் செய்து வேதாரணியம் சென்றடைந்து, அங்கே அகஸ்தியம்பள்ளி என்னும் இடத்தில், உப்பு எடுத்து, மகாத்மா காந்தியடிகள் தண்டியில் செய்த உப்பு சத்தியாகிரகத்தை, இங்கே, தமிழ்நாட்டில் அரங்கேற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் மரியாதைக்குரிய ராஜாஜி அவர்கள், மரியாதைக்குரிய சந்தானம் அவர்கள், மரியாதைக்குரிய சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்கள், உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும், தொண்டர்களும் போலீஸ் அடக்குமுறைக்கு ஆளாகி அடிபட்டு, உதைபட்டு, சிறை சென்று, செய்த தியாகம் வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பெரிய பெரிய அரசியல் கட்சி தலைவர்கள், பெரிய மிராசுதாரர்கள், இவர்களெல்லாம் உப்பு சத்தியாகிரகப் போர் நடத்தினார்கள் என்றால், சாதாரண பொதுமக்களும் நேரடியாக போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், தங்களுடைய சக்திக்கு உட்பட்டு ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அவர்களது அடக்குமுறைகளுக...