தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் பற்றி ஒரு பார்வை?
நல வாரிய உறுப்பினராக இல்லாதவர்கள் உடனே உறுப்பினராவதற்கு இந்த பதிவு உதவும் என்று கருதுகிறேன்.. தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் பற்றி ஒரு பார்வை? தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 17 நல வாரியங்கள் 1. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் 2. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம். 3. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம், 4. தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம் 5. தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம். 6. தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம் 7. தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம் 8. தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம். 9. தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம். 10. தமிழ்நாடு ஓவியர் நல வாரியம் 11....