காலனிய ஆட்சியினர் தங்களின் சுயதேவைக்காக இந்தியாவில் உள்ள சாதிகள் குறித்தத் தகவல்களை திரட்டினர். சாதி குறித்த ஆய்வுகளுக்கு, காலனிய ஆட்சியினர் தொகுத்த இனவரைவியல் நூல்களே இன்றைய ஆய்வாளர்களுக்கு வேத நூல் போல் இருந்து வருகிறது. வேத நூலை கேள்விக்குட்படுத்த மறுப்பது போலவே இனவரைவியல் நூல் மீதும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புவதில்லை.

பேராசிரியர். கோ.ரகுபதி காலனிய ஆட்சியினர் தங்களின் சுயதேவைக்காக இந்தியாவில் உள்ள சாதிகள் குறித்தத் தகவல்களை திரட்டினர். சாதி குறித்த ஆய்வுகளுக்கு, காலனிய ஆட்சியினர் தொகுத்த இனவரைவியல் நூல்களே இன்றைய ஆய்வாளர்களுக்கு வேத நூல் போல் இருந்து வருகிறது. வேத நூலை கேள்விக்குட்படுத்த மறுப்பது போலவே இனவரைவியல் நூல் மீதும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புவதில்லை. தென்னிந்தியாவில் உள்ள சாதிகளின் வரலாற்றினை எழுதுவதற்கு எட்கர் தர்ட்ஸனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலே வேதநூல். இந்த நூலில் பிராமண ஆணுக்கும் பிராமணர் அல்லாத பெண்ணுக்கும் பிறந்தவர்கள் என்றே பெரும்பாலான சாதிகளின் தோற்றம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. நாவிதர், நாசுவர், பண்டிதர், பண்டுவர், மருத்துவர், பரியாரி, குடிமகன் என பல பெயர்கள் இருந்த போதிலும் அவர்களை அம்பஷ்ட்டர் என்ற தலைப்பின் கீழ் எட்கர் தர்ட்ஸன் அவர்களின் தோற்றக் கதையை இவ்வாறு பதிவு செய்துள்ளார்: ”பிராமணருக்கும் வைசிய பெண்ணுக்கும் பிறந்தவர்கள் அம்பஷ்ட்டர்”. 1909ல் எட்கர் தர்ட்ஸன் என்ன எழுதினாரோ அதே விவரணைதான் ஒரு நூற்றாண்டை கடந்த பின்னரும் தொடர்...