மருத்துவ சமுதாயத்தின் சாதனை குடும்பம் மதுரை மோகன் மகள் நேத்ரா பசி பட்டினியால் வாடிய பல உயிர்களை தன் படிப்பிற்காக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்புகளை இழந்து வீட்டிலேயே முடங்கிய நிலையில் பசி என்னும் கோரப்பிடியில் இருந்த பல குடும்பத்தின் பசியை போக்கிய நமது மருத்துவ சமுதாயத்தின் உலகமே போற்றும் மதுரை மோகன் அவர்களின் வீட்டிற்கு இன்று காலை 10.30 மணி அளவில் நேரில் சென்று தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தின் சார்பாக மாநில பொதுச்செயலாளர் கம்பம் ராஜன் அவர்களின் தலைமையில் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் K.P.ராமதாஸ், தேனி மாவட்ட தலைவர் மனோகரன் அவர்களும் மோகன் அவர்கள் இல்லம் சென்று வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும்
மோகன் மகள் நேத்ராவிற்க்கு ஏழை
மக்களின் நல்லெண்ணத் தூதராக பதவி ஐ. நா. சபை அறிவிப்பு
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் !
கடந்த மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடிஜி மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர், 'கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறித்து உருக்கமாக பேசினார். அந்த உரையில், கொரோனா ஊடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உதவியவர்களையும் குறிப்பிட்டு பேசினார்.
இதுகுறித்து பேசிய அவர், 'கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற மக்கள் தங்களுடைய சொந்த சேமிப்பைக் கொண்டு ஏராளமான மக்களுக்கு உதவியுள்ளனர். அதில், மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் என்பவர் அவரது மகளின் படிப்புச் செலவுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்து சேர்த்துவைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டு ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு செலவிட்டு உதவி செய்துள்ளார்.அவருக்கு என்னுடைய பாராட்டுகள் என்றார்.
இதனையடுத்து மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மதுரை மோகனுக்கு பாராட்டுகள் குவிந்தன. அவரது மகள் நேத்ராவின் கல்விக்கு உதவிகளும் குவிந்து வந்தது. இந்நிலையில் நேத்ராவை ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான (United Nations Association for Development and Peace) சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத்தூதராக
அறிவிக்கப்பட்டுள்ளார்.மேலும்அவருடையஎதிர்காலத்திற்காக சுமார் ஒரு லட்ச ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மாநாட்டில் வறுமை ஒழிப்பு தொடர்பாக பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment