அம் -பட்டர் விளக்கம்
அம்பட்டர் என்பதற்கு ஒரே பொருள் "குருக்கள் "என்பன ஆகும். அம்பட்டர் என்னும் பெயர் புரோகிதம் செய்ததினால் வந்ததாகும். சில நூற்றாண்டுகளாக தான் புரோகிதம் செய்பவர்கள் பார்ப்பனராக இருக்கின்றனர்.அதற்கு முன்பு புரோகிதம் செய்தவர்கள் அம்பட்டர்கள் தான். பார்ப்பனர்களுக்கு பட்டர் குழுக்கள் என்னும் பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. பார்ப்பனர்களை போல நம் அம்பட்டரும் புரோகிதம் செய்து வந்தமையால் அவர்களுக்கு, "அம்பட்டர்", "குருக்கள்" என பெயர் வைத்தனர். "அம்" என்றால் "அழகிய", - "பட்டர்" என்றால், "பார்ப்பனர்கள்". தமிழ்நாட்டில் பல வகை பிராமணர்கள் இருக்கின்றனர். உதாரணமாக, சிலர், "விசுவகர்மா பிராமணர்கள்" என்றும், "கொங்கணி பார்ப்பனர்கள்" என்றும், சிலர் "சௌராஷ்ட்ரா பிராமணர்கள்" என்றும், சிலர் "ஸ்மார்த்தப பிராமணர்கள்" என்றும், சிலர் "வைணவ பார்ப்பனர்கள்" என்றும், சிலர் "சாததாத ஸ்ரீவைஷ்ணவ பார்ப்பனர்கள்" என்றும், "குருக்கள் பார்ப்பனர்கள்" என்றும், "நம்பூதிரி பார்ப்பனர்கள்" என்றும், பல பார்ப்பனர்கள் இருப்பது போலவே, "அம்பட்டரும்" உண்மையிலேயே ஒரு வகை பார்ப்பனக் குலத்தவராவர். அதனாலேயே தான் "பட்டார்" என்கின்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டுமே அல்லாமல் வேறு இல்லை.
இன்றும் கொங்கு மண்டலத்தில் "மங்களவர்" என சொல்லக்கூடிய மருத்துவ இனத்தவர்கள் மாங்கல்யம் எடுத்துக்கொடுத்து மந்திரம் ஓதி திருமணம் நடைபெறுகின்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கொங்கு மண்டல நாவிதர் சமூகத்தவர்கள் வரலாறுகளை படித்துப் பார்த்தால் தெரியும். "அம்பட்டர்" என்று சொன்னால் உயர்வாக தெரிகின்ற காரணத்தினால் பழைய ஆதிக்க சாதியினர் "அம்பட்டன்" என்று "ன்" சேர்த்து சொல்ல ஆரம்பித்தனர். ""நாலாம் தலைமுறையை பார் நாவிதனும் சித்தப்பன் ஆவான்"" என்கின்ற ஒரு பழமொழி இருக்கின்றது. அதன் அடிப்படையிலேயே பார்ப்போமானால், ஏழு, எட்டு தலைமுறைகளுக்கு முன்பாக இவர்கள் உயர்வானவர்களாகத்தான் இருந்து இருக்கின்றார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆதிக்க சமூகத்தினர் இவர்களை அடிமையாக்கி வைத்திருக்கின்றார்கள். கடந்த 100 ஆண்டுகளாக, 200 ஆண்டுகளாக இந்த சமூகம் அடிமைப்பட்ட சமூகமாக மக்கள் மனதில் பதிந்து விட்டது. மக்கள் மனதில் மட்டுமல்ல, மருத்துவ சமூக மக்கள் மனதிலும், அது பதிந்து விட்ட காரணத்தினால், தான் "அம்பட்டர்" என்கின்ற சொல்லை பயன்படுத்துகின்ற போது இவர்கள் இழிவாகக் கருதிகின்றார்கள். அதுபோல் இழிவாக கருதுகின்ற காரணத்தினால் தான், மற்ற சமூக மக்களிடம் இருந்து நாம் தாழ்ந்தவர்கள் என்கின்ற அந்த மனப்பக்குவம் இவர்களுக்கு ஏற்படுகின்றது. அதை துடைத்து ஒழிக்க வேண்டும்.
தகவல் தொடர்ந்து தெரியபடுத்துங்கள்
ReplyDelete