# எங்க சியாங்கையில காசுதுட்டு கொஞ்சம் கனமாருந்தா முடிவெட்ட என்னிய சைக்கிள்ல ஒக்காரவச்சுக்கிட்டு நாலழுத்துல பன்னியான்லருந்துசெக்காணத்துக்குக் கூட்டிக்குப் போயிரும்

மண்வாசனை- 7, "அம்மாசி" # எங்க சியாங்கையில காசுதுட்டு கொஞ்சம் கனமாருந்தா முடிவெட்ட என்னிய சைக்கிள்ல ஒக்காரவச்சுக்கிட்டு நாலழுத்துல பன்னியான்லருந்து செக்காணத்துக்குக் கூட்டிக்குப் போயிரும் அப்பறென்ன நந்தவனத்துல ஒரு குளியலப்போடுறதுதே தாம்சம் மண்டயன் விருமாண்டி கடையில அதுக்கு கள்ளு எனக்கு மசாலா மொச்ச மண்டையில முடி பழையபடிக்கா தளையிறவரைக்கும் உள்ளூருல முடிவெட்ற அம்மாசியோட வில்லத்தனத்துக்கிட்ட நம்பியாரு தோத்துப்போகணும் என்ன, எல்லாருக்கும் குருவிக்கூடுசவச்சு நல்லா எம்ஜீயார்மாரி வெட்டிவிடுவாப்புல ரெண்டு வெட்டுக்கு ஒருவிச வெளியூரு போற கைதானண்டு நெனப்பாப்பிலயோ என்னமோ எனக்கு மட்டும் ஒட்ட அடுச்ச விட்ருவாப்புல # ஒரு மண்டய முடிக்கிறதுக்குள்ள மூணு பீடிய இழுத்தெறிஞ்சிருவாப்புல நல்ல ஒசரம் அம்மாசி தலப்பலகையில ஒக்காரவச்சு மும்பாதம் தரையூண்டி குத்தவச்சுக்கிட்டா கத்திரிப்பான் ஒருகையில ஒக்காந்திருக்கிறவன் தல ஒருகையில எவ்வளவு பெரிய வெளக்கெண்ணெயா இருந்தாலும் தலையசைச்சிரப்பிட...