Posts

Showing posts from August 14, 2020

வேதை க வைரப்பன்

Image
தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உப்புக்கு பெயர் பெற்ற வேதாரண்யத்தில் 1930ல் நடந்த சம்பவம் இது. அப்போது சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. பொதுமக்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்களையும் அவர்களது எடுபிடிகளையும் புறக்கணித்து வந்த நேரம் அது. 1930ம் ஆண்டு ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டம் அந்தப் பகுதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. உப்பு காய்ச்ச தடைவிதித்த ஆங்கிலேயே அரசுக்கும், அவர்களது பணியாளர்களுக்கும் உதவிகள் எதுவும் செய்வதில்லை என்று மக்கள் தாங்களுக்குள்ளாகவே ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொண்டனர். அப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் #கே.#வைரப்பன் என்ற முடி திருத்துபவரிடம் முடி திருத்த வந்தார். #கே.#வைரப்பன் ஆங்கிலேயர்களுக்கும், அவர்களது பணியாளர்களுக்கும் முடி திருத்துவதில்லை என்று உறுதி பூண்டிருந்தார். முடி திருத்தும் வேலை நடந்து கொண்டிருந்தது. பேச்சுவாக்கில் அவர் ஒரு கான்ஸ்டபிள் என்ற உண்மை, 24 வயதான வைரப்பனுக்குத் தெரிந்தது. பாதி சவரம் செய்த நிலையில் அந்தக் கான்ஸ்டபிளுக்கு சவரம் செய்ய மறுத்து விட்டார். ...