Posts

Showing posts from April 10, 2020
Image

*காலம் தொற்று பரவிவரும் நோய் தொற்று* அதற்குள் அடங்கி இருக்கும் அறிவியல் வியாபார தொற்று****************************************************************************************************The Corporation Or Company That Changed The World, Every Era' Via With Medical. கடந்த பத்தாண்டுகள் வரை கிராமப்புற நாவிதர்கள் வைத்திருந்தது ஒரிரண்டு சவரக்கத்தி மட்டுமே. அக்கத்தியில் சவரம் செய்த பின்பு அவர்கள் வைத்திருக்கும் ஒட்டக்கத்தோல் அல்லது சானைக்கல்லில் பட்டை தீட்டி அடுத்தவர்களுக்கு சவரம் செய்தார்கள். கத்தியின் பதம் போய் விட்டால் ஆசாரிகள் உதவியோடு சானை பிடித்து பதமேற்றி மீண்டும் சவரம் செய்தனர். சவரகத்திக்கு போட்டியாக புதிய கண்டுபிடிப்பான பிளேடு வந்தது. இதன் கண்டுபிடிப்பு 18ம் நூற்றாண்டாக இருந்தாலும், 1950 காலங்களில் இப்பிளேடு தீடீரென கிளம்பியது. ‘’படைபத்து, தேமல் போன்ற தோல் நோய்கள் பரவுவது ஒரே கத்தியில் பலருக்கு முகச்சவரம் செய்வதால் ஏற்படுகிறது’’ என்ற பரப்புரை கிளம்பியது. இதை கண்டறிந்து ? சொன்னது மருத்துவ உலகத்திற்காக மருத்து தயாரிப்பு நிறுவனங்கள். படைபத்தினை நீக்க நம்மூர் சைபால் போன்ற நிறுவனங்கள் தோன்றியது இதன் பரப்புரையின் வடிவம். படிப்படியான பரப்புரையை நிகழ்த்தியதன் விளைவாக மேலைநாட்டு நாவிதர்கள் கத்தியிலிருந்து பிளேடுக்கு மாறினார்கள். ஆனால் இவர்கள் சரியாக பிடித்து முகச்சவரம் செய்திட முடியாமல் பலரை பிளேடால் பதம் பார்த்தார்கள். ஒருவழியாக ஜெர்மன் நாட்டில் இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமானது. அப்படி இருந்தும் பிளேடின் விற்பனை பெரும் மந்தமாக இருந்தது. நம்ம ஊரில் ரேடியோ சின்ன பாக்கெட் கதை நூல்களில், அதன் பின்னர் மாத, பதினைந்து நாள்களுகு ஒரு முறை வரும் பல்சுவை இதழ்களில் விளம்பரம் போட்டார்கள். இதன் தாக்கம் பரவலானது தவிர, வெற்றிகரமாக பிளேடு தொழிலை விற்பனை செய்திட முடியவில்லை, ஆனால் சைபால் போன்ற நிறுவனங்களே இதன் பலனை அனுபவித்தது. இந்த பலனை திருப்ப கண்டறிந்த மருந்து தான் ஹச்ஐவி.இரத்த தொற்று மூலமாக பொம்பளகிட்ட போகதவனுக்கும் ஹச்ஐவி பரவும் என்ற பரப்புரையால் நம்ம ஊரில் காற்றாக பரவியது பிளேடு. ஹச்ஐவி தொற்று இருக்கும் ஆண் உடலுறவு கொண்டாலும் பெண்ணுக்கு பிறப்பு உறப்புகளில் காயம் இருந்தால் மட்டுமே இந்த நோய் பரவும். இது போலவே ஆணுக்கும் என்பது மருத்துவ உலகம் பரப்புரையில் சொன்னார்கள். நடந்தது என்னவோ பிளேடு ஏவாரமும் காண்டமும். இந்த ஹச்ஐவி வைரஸ் என பெயர் வைப்பதற்கு முன் இந்த நோய் உலகத்திலே இல்லையெனவும் நம்பிய நம்மில் எத்தனை பேருக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த நோய் தொற்று இருந்து வருகிறது எனத் தெரிந்திருப்போம் என்பதும் ஐயமே.வைரஸ் கிருமிகள் காற்றில் உயிர் வாழும் நேரம் நொடியில் நூறில் ஒரு பங்கு என்றார்கள், ஆனாலும் *உயிர் பயப்பரப்புரையின் விளைவு சகமனிதனை *பொம்பளபொறுக்கி*’யாகப் பார்க்க வைத்ததுடன் ஹச்ஐவி தொற்றுள்ளவனாக பார்க்க வைத்தது. இப்பவும் அப்படித்தான் சக மனிதனைப் பார்கிறார்கள், பார்க்க வேண்டும் பரப்புரையாற்றுகிறார்கள். பரப்புரையின் இலக்கு எந்த கொட்டத்தை நோக்கி என்பது ஆடுகளுப்போல் அவர்களுக்கும் தெரியாது. ஆடாகிய நமக்கும் தெரியாது.நீரில் நோய் பரவும் என்று புட்டி நீர் உற்பத்தி துவக்கினார்கள். காற்றில் என்று "சொன்னால் சொன்னவைன் ஏன் சாகவில்லை என கேட்பான்" என இன்னும் சொல்லாமல் உள்ளனரோ என்னவோ.தற்போது அறிவித்துள்ள *உலகடங்கு* தொற்றுகுப்பின்னால் பல விஞ்ஞான கருவிகள் பதுங்கி இருக்கலாம். அது விரைவில் விளம்பரக்காற்றில் வரும். ஏனென்றால் மக்களாகிய நாம் *பேசத்தெரிந்த நுகர்வோர்* என்பதை அறிவாளிகள் அறிந்து வைத்திருப்பார்கள்.நாம் அறிந்திருக்க மாட்டோம்.

Image