Posts

Showing posts from June 5, 2020

அறுவை சிகிச்சை மருத்துவர்

Image
இன்றைய இந்தியா பண்டைய கால பாரதமாக இருந்த போது உலக நாடுகளுக்கு பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் கலை மற்றும் ஆன்மீக சிந்தனைகள் ,மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கியதன் சான்று பல தெரிந்து இருக்கலாம் ஆனால் உலகில் மருத்துவம் சார்ந்த துறையில் முன்னோடியாக விளங்கிய நம்மவர்கள் பற்றி தெரிந்து கொள்ள நாம் தவறிவிட்டோம்!!1,தத்துவம்-இறை நம்பிக்கை அல்லது ஆத்ம ஞானம் என்று பொருள் படும் ஆன்மா கண்களுக்கு புலப்படாத சூட்சும உடலுக்காக வாழும் கலை நயம் இல்லற வாழ்வியல் ஒழுக்கம் சார்ந்தவை...2,மருத்துவம்-மறு+தத்துவம் இது இந்த  ஆன்மாவை சுமக்கும் சரீர உடலுக்கான சிகிச்சை முறைகள் ஆகும்...சித்தர்கள் கண்களுக்கு புலப்படாமல் செய்த அற்புதங்கள் பல ஆனால் ஒரு மருத்துவராக அந்தக் காலகட்டத்தில் வைத்தியத்தில் பல அருமையான சாதனை படைத்த உலகின் முதல் அறுவை சிகிச்சையாளர் சுஷ்ருதா் என்ற சுஷ்ருதா 2800 ஆண்டுகளுக்கு முன். அறுவை சிகிச்சை செய்த இந்தியர். இந்திய மருத்துவ துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவரும் உலகில் முதன் முதலில் ப்ளாஸ்டிக் ஸர்ஜரீ செய்தவருமான ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தலைசிறந்த மருத்துவர் சுஷ்ருதா. இவர...

கொரோனாவை விட கொடிய ஜாதிய கிருமிகள் : ஆங்கில மருத்துவம் மருத்துவமனைகள் வரும் முன்னர் மருத்துவ சமுதாய மக்களே நம் மக்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களை சித்தமருத்துவம் கொண்டு பேணி பாதுகாத்து வந்தனர்.அன்று மருத்துவச்சி தொடாவிட்டால் தாயும் சேயும் இம்மண்ணில் நலம் பெற முடியாது. மருத்துவன் இல்லையெனில் இங்கு நோய்கள் நடுவீட்டில் பாய் போட்டு படுத்துக் கொள்ளும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று எண்ணி இந்த மண்ணை பேணிய மனங்களை ஆணிக் கொண்டு அடித்துள்ளது.ஜாதிய ஆதிக்கம் செலுத்தும் மனிதரூப மிருகங்கள் காலம் பதில் சொல்லும் காலனின் கால்களில் நீ செல்லும் போது ஜாதி மதம் தேய்ந்தே போகும்...

Image

மருத்துவர் வரலாற்றில்

மங்கலகரமான தொழில் செய்த காரணத்தினால் “மங்கலன்” என்னும் பெயர் பெற்ற மருத்துவக் குலத்தினர், மன்னர்களால் வழங்கப்பட்ட ‘மங்கல’ என்ற மங்கலகரமான சொல்லினை தங்கள் பெயரோடு இணைத்துக் கொண்டனர் என ஆய்வாளர் நந்தர் கூறுகிறார். மேலும்; மங்கல சமூகத்தார், சமண சமயத்தைச்சார்ந்த அசோக மன்னரின் நந்த வம்சாவளியில் வந்தவர்கள் என்றும், அவர்கள் மங்கல(வன்), மங்கலை, நாவிதர், சவர்ணன், வைத்தியர், அங்கவைத்தியர், மருத்துவர், மருத்துவச்சி, பட்டர், அம்பட்டர், ஆமாத்தியர், மாமாத்தியர், மகாமாத்திரர், மாமாத்திரர், பெருமஞ்சிகர், பிராணோபகாரி, பிரயோகத்தரையன், ஆசவராயர், சல்லியராயர், குடிமக்கள், ஆசிமக்கள், பண்டிதர், பிராமணர், வேலக்கட்டழவர், வேலக்கட்டழநாயர் என்று பலவகைகளிலும் அழைக்கப்பட்டதைச் சான்றுகளுடன் ஆவணப்படுத்தியுள்ளார் நந்தர். ‘மங்கல’ என்பது திருவள்ளுவரின் வாக்குப்படி தூய தமிழ்ச்சொல் மட்டுமல்ல, வரலாற்றுச் சான்றுகளின்படி அச்சொல் மருத்துவக் குலத்தினரையும் குறிப்பதாகும் என்று கருதும் ஆய்வாளர், சான்றுகளின் மூலம் அதை நிறுவும் முயற்சி இந்த ஆய்வு நூலாக உருவாகியுள்ளது. சேக்கிழாரின் பெரியபுராண – சிறுத்தொண்டர் புராணத்தின் “ஆயுள் வேதக...

மருத்துவர் வரலாற்றில்

Image
வைதிகத்தை (பரிகாரி)வேதமார்க்கம்; ஆசாரங்களைச் சிரத்தையோடு கடைப்பிடித்தல் அல்லது சமயசடங்குகளை விட்டுவிட்டு லௌகிகப் பிரவிருத்திகளில் (தொழில்களில்) போனதால் தனியாகப் பிரிக்கப்பட்ட ‘மஹாமாத்ரர்’ என்ற வகுப்பைச் சேர்ந்தவர். ‘மாமாத்திரர்’ என்று பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிறது. ‘மாமாத்திரர்’ என் மாதிரியே ‘அமாத்தியர்’(ஐம்பட்டர்) என்று. ஸம்ஸ்க்ருதத்தில் ‘அமாத்யன்’ என்றால் மந்திரி மற்றும் வைத்தியர். ‘அமாத்யன்’ தான் தமிழில் ‘அமைச்சன்’ மற்றும் வைத்தியர் ஆயிற்று. ‘.மாணிக்க வாசக ஸ்வாமிகள் அமாத்யர் ஆவார். பாண்டிய ராஜாவுக்கு அமாத்யராக (மந்திரியாக) இருந்து ‘தென்னவன் பிரமராயன்’ என்று பட்டம் வாங்கியவர். சோழ ராஜாக்களும் அமாத்ய மந்திரிகளை வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பிரமராயப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். வைதிக தொழிலை விட்டுவிட்டு ராஜாங்கத்தில் ‘பொது நிர்வாகம்’ செய்யப்போனவர்கள் அமாத்தியர் என்று பிரித்து வைத்தது. அவர்களிலேயே இன்னும் ஒரு படி தள்ளி இராணுவ தளபதியாக போனவர்களை மாமாத்திரர் என்று பிரிவினை பண்ணிற்று. அவர்களில் வைத்தியத் தொழிலிலும் நிறையப் போயிருக்கிறார்கள். ஸேனையில் சேர்ந்து உயிரை எடுப...

சுளுந்தீ நாவல்

Image
சுளுந்தீ’. ‘பண்டிதர்’ நிலையிலிருந்து ‘முண்டிதர்’ நிலைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய இந்த அரிய ‘ஆவண நாவல்’ தமிழுக்குக் கொடை. தமிழில் அம்+பட்டர் என்பதே ‘அம்பட்டர்’ ஆனது என ஒரு விளக்கம் உண்டு. உயர் சாதியினருக்கு மருத்துவம் பார்க்கையில் தீட்டினைத் தவிர்க்கும் பொருட்டு ‘அழகிய பட்டுத் துணியினை அவர்கள் கைமேல் அணிவித்து நாடி பார்த்ததால் இப்பெயர் வந்தது என்பர். ‘அம் பட்டு’ என்றால் அழகிய பட்டு. ஆனால் இவ்விளக்கம் பொருத்தமானதாகத் தோன்றவில்லை. இரணசிகிச்சை மற்றும் பிரசவத்தை எப்படி அணுகியிருப்பார்கள் என்கிற கேள்வி பிறக்கிறது. இன்று இழிசொல்லாக மாறியுள்ள ’அம்பட்டர்’ என்ற சொல்லின் உண்மைப் பொருளே வேறு. அது ‘அம்பா’ (பக்கம்), ஸ்தா (இருப்பவர்) ஆகிய இரு வடமொழி வேர்ச்சொற்கள் இணைந்து தன்னிடம் சவரம் செய்து கொள்பவர் அருகிலோ, மருத்துவர் பார்த்துக் கொள்பவர் அருகிலோ இருப்பவர் என்ற பொருளைத் தருவதாகும். மலையாள சவரத் தொழிலாளியான ‘காவுதியன்’ அருகிலிருப்பவர் எனும் பொருளில் ‘அடுத்தோன்’ என்று அழைக்கப்படுவது சான்று. வேதியர் தொழிலை உயர்வான தொழிலாக நிலைநிறுத்த இதரத் தொழில்களைக் கீழ்மைப்படுத்த வேண்டிய அவசியம...