சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸின் 134 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தியாகி விஸ்வநாததாஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Published on : 16th June 2020 சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸின் 134 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேடை நாடகங்கள் மூலமாக மக்களுக்கு சுதந்திர வேட்கையை வளர்த்தவர் தியாகி விஸ்வநாததாஸ். ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து தனது பாடல்கள் மூலமாக மக்களுக்கு சுதந்திரப் போராட்ட உணர்வை வளர்த்தெடுத்தார். அவரது நினைவாக தமிழக அரசால் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாளையொட்டி நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல், திருமங்கலம் வட்டாட்சியர் தனலெட்சுமி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுருளிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.