#சித்தமருத்துவரின்_சமூக_மருத்துவம்எனும் அற்புத நூல்# ஆனந்தம் பண்டிதரின் அளப்பறிய சேவையையும் மக்களுக்கு ஆற்றிய தொண்டினையும் சித்தமருத்துவத்தை நிலைநாட்டவும் அதை ஆயுர்வேதம், யுனானி ஆகிய இரண்டு வைத்திய முறையோடு அரசு சித்த தமிழ் மருத்துவத்தையும் ஏற்று மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும் என்று போராடி (1/07/1924) வெற்றி கண்டதும் . ( உங்கள் மருத்துவச்சாலையில், அப்போதிருந்த வழக்கத்தை மீறி சாதி மதம் பேதம்இன்றி மருத்துவம் பார்த்தீர்கள் என்று அறிந்ததும் உள்ளம் மகிழ்ந்ததை சொல்ல வார்த்தையில்லை )இன்னும் அற்புத நிகழ்வுகளையும் தாங்கள் நடத்திய மருத்துவன் இதழ் கூற்றின் படியே அறியக்கிடைத்தது பெருமைக் கூறிய விடையம்மேலே சொன்ன பாட்டின் தொடர்ச்சியாக...ஆனந்தம் கண்ட மருத்துவம் இன்று ஆனதே ஆண்டை கைவசம் என்றுமறந்தோமே மறந்தும் மழித்தோமே மறவாதே சித்தம் மறவாதே...என்றது பாட்டிற்காக நான்சேர்த்ததில்லை பட்ட அனுபத்தின் எதிரொலியாக சேர்ந்தது தான் அதுஇந்த படைப்பு ஆசிரியர்கோ. ரகுபதி அவர்கள்முன்னுரை மட்டுமே தன் மூளைக்கு வேலை கொடுத்துள்ளார் மற்றவை மருத்துவன் இதழில் வந்தவை தான். அதற்காகத்தான் தன்னை பதிப்பாசிரியர் என்று பிரகடனம் செய்தாரோ என்னவோஎதுவானாலும் இந்த தகவல்களை திரட்டி தந்தமைக்கு கோடிமுறை நன்றியோடு கரம்கூப்புவேன் . நன்றி !!
