தீண்டாமை ????

பறையரை தொட்டால் ஒற்றை தீட்டு, நாவிதரை தொட்டால் இரட்டை தீட்டு! தியாகு லோகநாதன் அறிவில் சிறந்த உறவுகளே! வரலாற்று படிமங்களில் மிகப்பெரிய அழுக்குகளை உங்களுக்கு சுட்டிக்காட்டவே இந்த பதிவு. இது உங்களை மனதை சுட்டால் , சுடட்டும்.. சுட்ட இரும்பும், ஊனும்,மண்ணும் செம்மையாவது போல் உங்கள் மனமும் செம்மையாகட்டும். தீண்டாமை உள்ள காலங்களில் பறையரை தொட்டால் தீட்டு என்றார்கள், சானார்களை பார்த்தாலே தீட்டு என்றார்கள். ஆனால் நாவிதரை இரட்டை தீட்டு என்றார்கள். ஏன் இந்த இரட்டை தீட்டு? பறையரையும், சானாரையும் மற்றும் இதர தாழ்ந்தவர்கள் என இடையில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை தொட்டாலே தீட்டு என கூறியவர்கள், இவர்களை தொட்டு முடிதிருத்துவதால் இவர்களுக்கு இரட்டை தீட்டு என வகுத்தார்கள். முன்பெல்லாம் வீட்டில் வந்து தான் நாவிதர் பெருமக்கள் முடி திருத்துவதால் செவ்வாய், வெள்ளி போன்ற புனித/ பூசை செய்யும் நாட்களில் முடிவெட்டுவதை தவிர்த்தார்கள். ஆனால் 2020இல், Corona virus வந்தபொழுது தான், முடிவெட்டுதல் ஒரு கலை மட்டுமல்ல அது நாகரீகத்தின் அடிப்படை என உணர்ந்தோம். இவ்வளவு முக்கியமான வேலைகளை செய்து வந்த நாவிதர் பெருமக...