சாதிக்கும் நீதி இல்லைசாதிப்பதற்கும் நீதி இல்லை
💐💐💐💐💐💐💐❣💐 சாதிக்கும் நீதி இல்லை ! சாதிப்பதற்கும் நீதி இல்லை ! 💐💐💐💐💐💐💐 சாதிக்கும் நீதி இல்லை சாதிப்பதற்கும் நீதி இல்லை ! எடுத்தேன் ஏட்டை வடித்தேன் பாட்டை சரி தவறு உங்கள் கையில் ஆளப் பிறந்தோம் அடிமைத் தொழில் புரியோம் மாற்றார்க்குத் தாள் பணியோம் மானம் மதித்திருப்போம் ஆற்றல்மிகு மருத்துவர் ஆண் சிங்கங்கள் நாம் ! சித்த மருத்துவத்தை சிறப்பாய் செய்து வந்த சித்தர்கள் வழி வந்த இனமே நம்மினம் ஆங்கில ஆதிக்கத்தால் அல்லோபதி வருகையால் அறமிழந்த வைத்தியம் அவலமாய் போனதே சிந்தை கலங்கியே சிகை திருத்தும் தொழில் கண்டே சிறப்பாய் வாழ்வு கண்டோம் ! சந்தனமாய் மணக்காமல் கார்பரேட் வருகையால் சத்திழந்து நிற்கின்ற சாதிக்கும் நீதி இல்லை ! சாதிக்கொரு நீதியா ? எங்களுக்கு மட்டும் அநீதியா ? இட ஒதுக்கீட்டில் இல்லை உள்ளீடு பலமான இனத்திற்கு 10.5 எம்மின குலத்திற்கு இருட்டடிப்பு காட்டிய 2.5 சாதிக்கும் நீதி இல்லை எம்மின குழந்தைகள் சாதிப்பதற்கும் நீதி இல்லை ! அடிமைத் தளை களைய ஆண்டியும் அரசனாக பட்டம் படிப்பு பெற பட்டையாய் ஒரு நாமம் சாதிக்கும் நீதி இல்லை எம்மின மக்கள் சாதிப்பதற்கும் நீதி இல்லை ! சமுதாய மேட...