சாதிக்கும் நீதி இல்லைசாதிப்பதற்கும் நீதி இல்லை
💐💐💐💐💐💐💐❣💐
சாதிக்கும் நீதி இல்லை !
சாதிப்பதற்கும் நீதி இல்லை !
💐💐💐💐💐💐💐
சாதிக்கும் நீதி இல்லை
சாதிப்பதற்கும் நீதி இல்லை !
எடுத்தேன் ஏட்டை
வடித்தேன் பாட்டை
சரி தவறு உங்கள் கையில்
ஆளப் பிறந்தோம்
அடிமைத் தொழில் புரியோம்
மாற்றார்க்குத் தாள் பணியோம்
மானம் மதித்திருப்போம்
ஆற்றல்மிகு மருத்துவர்
ஆண் சிங்கங்கள் நாம் !
சித்த மருத்துவத்தை
சிறப்பாய் செய்து வந்த
சித்தர்கள் வழி வந்த
இனமே நம்மினம்
ஆங்கில ஆதிக்கத்தால்
அல்லோபதி வருகையால்
அறமிழந்த வைத்தியம்
அவலமாய் போனதே
சிந்தை கலங்கியே
சிகை திருத்தும் தொழில் கண்டே
சிறப்பாய் வாழ்வு கண்டோம் !
சந்தனமாய் மணக்காமல்
கார்பரேட் வருகையால்
சத்திழந்து நிற்கின்ற
சாதிக்கும் நீதி இல்லை !
சாதிக்கொரு நீதியா ?
எங்களுக்கு மட்டும் அநீதியா ?
இட ஒதுக்கீட்டில் இல்லை உள்ளீடு
பலமான இனத்திற்கு 10.5
எம்மின குலத்திற்கு
இருட்டடிப்பு காட்டிய 2.5
சாதிக்கும் நீதி இல்லை
எம்மின குழந்தைகள்
சாதிப்பதற்கும் நீதி இல்லை !
அடிமைத் தளை களைய ஆண்டியும் அரசனாக
பட்டம் படிப்பு பெற
பட்டையாய் ஒரு நாமம்
சாதிக்கும் நீதி இல்லை
எம்மின மக்கள்
சாதிப்பதற்கும் நீதி இல்லை !
சமுதாய மேடு பள்ளம்
சாக்கடையாய் சில நேரம்
பாலின வக்கிரத்தால்
பாழாய்ப் போன கலைவாணி
சல்லடையாய் உடல்தலை முண்டமாய் வெட்டி சாய்க்க உயிரிழந்த என் சகோதரன் கரூர் விக்னேஷ் சாதி வெறிக் கும்பலால் சாம்பலாய் கரைந்தானே !
வன்கொடுமை சட்டமிருந்தால்
கொலைக் கும்பல் தப்பித்திருக்குமா ?
சாதிக்கும் நீதி இல்லை !
இதெல்லாம் ஒழிந்து போக
இட ஒதுக்கீடு சட்டம் இதமாய் வேண்டும் !
வன் கொடுமை தடை சட்டம் வகையாய் வேண்டும் !
இதமாய் பதமாய் வழியாய் வகையாய் புறமாய் அறமாய்
போராடியே நாம் அனைத்தையும் பெற்றாக வேண்டும் !
நெஞ்சில் துணிவாய்
செயலில் புயலாய்
வாய்ச் சொல்லில் வீரணாகாமல்
வரலாற்றை படைத்திட வேண்டும் !
வாய்ப்புக்காக நன்றியோடு
பேரண்புடன் பேராசிரியர் முத்து
💐❣👍🏻❣💐❣👍🏻💐👍🏻
Comments
Post a Comment