Posts

மருத்துவரே மருத்துவரே கொஞ்சம் நில்லுங்கள் திரு முகவை முத்துக்கருப்பன் அவர்களின் 1997 ஆம் ஆண்டு சமுதாய மடல் பத்திரிக்கைக்கு எழுதிய கவிதை மடல்

மருத்துவரே  மருத்துவரே கொஞ்சம் நில்லுங்க -உங்க  மனக்குறைதான் என்னனு இப்போ சொல்லுங்க  கருத்துக்களை கேட்டிடுவோம் நாங்கதானுங்க -உங்க  கவலைகளை விரட்டிடுவோம் உறுதிதானுங்க  கூலிக்குத்தான் பிழைக்கிறாங்க நம்ம ஆளுங்க -சும்மா  குடித்துகுடித்து அளிக்கிறாங்க நிறையபேருங்க  சாதியைத்தான் பேசுறாங்கமற்ற ஆளுங்க -ஆனால்  சங்கடத்தில் வாடுவதோ நம்ம குமருங்க  அடிமைசெய்யும் குடியைநம்பி வாழலாகுமா -சும்மா  அவதிப்பட்டு குடலறுக்க விதி வசமா  வாலிபத்தில்தேடி  வைத்துவாழ  பழகணும் -வரும்  வயோகத்தில் அதைசுவைத்து வாழ்ந்துமறையனும்  போதைபோதை என்போருக்கு ஒன்றுசொல்வேங்க -கொஞ்சம்  பொறுமையுடன் கேட்கவேணும் நீங்கதானுங்க  கோடிபணம் தேடித்தரும் கோலார்தங்கமா -அது  கொன்றுஉன்னை  தூக்கிவிடும் சாவுசின்னமா  காந்தித்தாத்தா போலநீங்க மதுவைமறக்கணும் -தினம்  காலைமாலை வேலைசெய்து பணத்தைசேர்க்கணும்  மனைவிமக்கள் தான்மகிழ வாழ்ந்துகாட்டணும் -தெய்வத்திடம்  மண்டியிட்டு தண்டம் செய்து மன்னிப்பு கோரணும்.  கவிதை ஆக்கம்  திரு முகவை ம...

சென்னை மருத்துவர் சங்கத்தார் 1925ஆம் ஆண்டு மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹாலில் சென்னை சட்டசபை தலைவர் திரு திவான்பகதூர், LTசுவாமிக்கண்ணுப்பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற 2வது மருத்துவர் மாநாடு

Image

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸின் 134 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Image
தியாகி விஸ்வநாததாஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை   Published on : 16th June 2020  சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸின் 134 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேடை நாடகங்கள் மூலமாக மக்களுக்கு சுதந்திர வேட்கையை வளர்த்தவர் தியாகி விஸ்வநாததாஸ்.  ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து தனது பாடல்கள் மூலமாக மக்களுக்கு சுதந்திரப் போராட்ட உணர்வை வளர்த்தெடுத்தார். அவரது நினைவாக தமிழக அரசால் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.  தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாளையொட்டி நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல், திருமங்கலம் வட்டாட்சியர் தனலெட்சுமி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுருளிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தியாகி எஸ். எஸ். விஸ்வநாத தாஸ் 134 வது பிறந்தநாள் இன்று

Image
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் அனைத்து உறவுகளுக்கும் எனது அன்பான வணக்கத்தை அன்புடன் பகிர்ந்துகொள்வது புதுக்கோட்டை M.A.பாண்டியன். வணக்கம் உறவுகளே! இந்திய சுதந்திரத்திற்காக 29 முறை சிறை சென்ற நமது சுதந்திரப் போராட்ட தியாகி திரு எஸ் எஸ் விஸ்வநாத தாஸ் அவர்களுடைய 135 ஆவது பிறந்த தினம் இன்றைய தினம் மிக சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. 1886ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி பிறந்த தியாகி ஐயா எஸ் எஸ் விஸ்வநாத தாஸ்  அவர்களுக்கு இன்று 135 ஆவது பிறந்ததின விழா மிகச்சிறப்பாக, தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தின் சார்பாகவும், முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாகவும் அனைத்து மாவட்டங்களிலும் மிக சிறப்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மூலமாக ஐயா அவர்களுடைய திருவுருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மிக சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கின்றார்கள். தி...

காலனிய ஆட்சியினர் தங்களின் சுயதேவைக்காக இந்தியாவில் உள்ள சாதிகள் குறித்தத் தகவல்களை திரட்டினர். சாதி குறித்த ஆய்வுகளுக்கு, காலனிய ஆட்சியினர் தொகுத்த இனவரைவியல் நூல்களே இன்றைய ஆய்வாளர்களுக்கு வேத நூல் போல் இருந்து வருகிறது. வேத நூலை கேள்விக்குட்படுத்த மறுப்பது போலவே இனவரைவியல் நூல் மீதும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புவதில்லை.

Image
பேராசிரியர். கோ.ரகுபதி காலனிய ஆட்சியினர் தங்களின் சுயதேவைக்காக இந்தியாவில் உள்ள சாதிகள் குறித்தத் தகவல்களை திரட்டினர்.  சாதி குறித்த ஆய்வுகளுக்கு, காலனிய ஆட்சியினர் தொகுத்த இனவரைவியல் நூல்களே இன்றைய ஆய்வாளர்களுக்கு வேத நூல் போல் இருந்து வருகிறது.  வேத நூலை கேள்விக்குட்படுத்த மறுப்பது போலவே இனவரைவியல் நூல் மீதும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புவதில்லை. தென்னிந்தியாவில் உள்ள சாதிகளின் வரலாற்றினை எழுதுவதற்கு எட்கர் தர்ட்ஸனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலே வேதநூல்.  இந்த நூலில் பிராமண ஆணுக்கும் பிராமணர் அல்லாத பெண்ணுக்கும் பிறந்தவர்கள் என்றே பெரும்பாலான சாதிகளின் தோற்றம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.  நாவிதர், நாசுவர், பண்டிதர், பண்டுவர், மருத்துவர், பரியாரி, குடிமகன் என பல பெயர்கள் இருந்த போதிலும் அவர்களை அம்பஷ்ட்டர் என்ற தலைப்பின் கீழ் எட்கர் தர்ட்ஸன் அவர்களின் தோற்றக் கதையை இவ்வாறு பதிவு செய்துள்ளார்: ”பிராமணருக்கும் வைசிய பெண்ணுக்கும் பிறந்தவர்கள் அம்பஷ்ட்டர்”.  1909ல் எட்கர் தர்ட்ஸன் என்ன எழுதினாரோ அதே விவரணைதான் ஒரு நூற்றாண்டை கடந்த பின்னரும் தொடர்...

மருத்துவர் சமூகம்உலகெங்கும் உள்ள மருத்துவர் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக ..மருத்துவர் சமூக வரலாறு

Image
மருத்துவர் சமூகம் உலகெங்கும் உள்ள மருத்துவர் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக .. மருத்துவர் சமூக வரலாறு சலூன் க டை என்றாலே சிறுவர்களாக இருந்த பொழுது அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் அங்கங்கள் நமக்கு அறிமுகமான இடம் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். சவரத்தொழிலாளிகள் என்பவர்கள் யார், ஏன் அவர்கள் அந்த தொழிலை செய்துவருகிறார்கள் ? அவர்களுக்கு அது குலத்தொழிலா ? என்கிற கேள்வியை நம்மில் கேட்டுக் கொண்டவர் குறைவே. எந்த ஒரு இனத்திலும் குலத்தொழிலாக இல்லாத பலத் தொழில்கள் இந்தியாவில் குலத்தொழில்களாகத் தொடர்வதில் சவரத் தொழிலும் ஒன்று. சவரத் தொழிலாளிகள் யார் ? அம்பட்டர், பரியாரி, பார்பர், நாவிதர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் மருத்துவர் என்னும் ஆதிமருத்துவர் சமூகம் எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால், பண்டைய இந்தியாவில் முடிகளை மழித்துக் கொள்ளும் பழக்கம் பெளத்தர்களுக்கும், சமணர்களுக்குமே உரிய வழக்கம், அவர்கள் தவிர்த்து பார்பனர்கள் தலை உச்சியைத் தவிர்த்து தலையை மழித்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். உடலில் பூணூல் அணியாத காலங்களில் பார்பனர்கள் தங்களின் தனி அடையாளத்திற்காக உச்சிக் குடுமி வைத்து ...

காந்தி எனும் நாவிதர்( அல்லது )காந்தி எனும் முடிதிருத்துபவர்…

காந்தி எனும் நாவிதர்… (பாகம் 2 /2   வெ. ராமசாமி 8 years ago … அல்லது காந்தி எனும் முடிதிருத்துபவர்… “பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின்   ஐந்தாம் அத்தியாயம்: பார்பர். இவ்வத்தியாயத்தின் முதல் பாகம் . கீழே இரண்டாம் பகுதி…. =-=-=-= … அவருடைய ஆசிரமங்களில், வெளியிலிருந்து வந்து, நாவிதர்கள் சவரம் செய்தல், முடிவெட்டுதல் என்கிற பேச்சே இல்லை… ஆசிரமவாசிகள், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு அவர்களின் நாவித வேலைகளைச் செய்து கொண்டனர். காந்தி, ஆசிரம மாணவர்களை, எளிய சுயசார்புடைய வாழ்க்கை முறைகளுக்குப் பழக்கப் படுத்தப் படவேண்டுமென விரும்பினார். புதுப்பாணி உடைகளுக்கோ, காலவண்ணங்களுக்கேற்றபடியான நவநாகரீகங்களுக்கோ, அறுசுவை சொட்டும் உணவுகளுக்கோ, அவர் ஆசிரமத்தில் இடமில்லை. =-=-=-= ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை, ஆசிரம மாணவர்கள், குளிக்கச் செல்வதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். காந்தி அவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கூப்பிட்டு, அவர்களுக்கு முடி வெட்டி விட்டார். அம்மாணவர்களுக்கு ...