மருத்துவரே மருத்துவரே கொஞ்சம் நில்லுங்கள் திரு முகவை முத்துக்கருப்பன் அவர்களின் 1997 ஆம் ஆண்டு சமுதாய மடல் பத்திரிக்கைக்கு எழுதிய கவிதை மடல்

மருத்துவரே  மருத்துவரே கொஞ்சம் நில்லுங்க -உங்க 
மனக்குறைதான் என்னனு இப்போ சொல்லுங்க 
கருத்துக்களை கேட்டிடுவோம் நாங்கதானுங்க -உங்க 
கவலைகளை விரட்டிடுவோம் உறுதிதானுங்க 
கூலிக்குத்தான் பிழைக்கிறாங்க நம்ம ஆளுங்க -சும்மா 
குடித்துகுடித்து அளிக்கிறாங்க நிறையபேருங்க 
சாதியைத்தான் பேசுறாங்கமற்ற ஆளுங்க -ஆனால் 
சங்கடத்தில் வாடுவதோ நம்ம குமருங்க 
அடிமைசெய்யும் குடியைநம்பி வாழலாகுமா -சும்மா 
அவதிப்பட்டு குடலறுக்க விதி வசமா 
வாலிபத்தில்தேடி  வைத்துவாழ  பழகணும் -வரும் 
வயோகத்தில் அதைசுவைத்து வாழ்ந்துமறையனும் 
போதைபோதை என்போருக்கு ஒன்றுசொல்வேங்க -கொஞ்சம் 
பொறுமையுடன் கேட்கவேணும் நீங்கதானுங்க 
கோடிபணம் தேடித்தரும் கோலார்தங்கமா -அது 
கொன்றுஉன்னை  தூக்கிவிடும் சாவுசின்னமா 
காந்தித்தாத்தா போலநீங்க மதுவைமறக்கணும் -தினம் 
காலைமாலை வேலைசெய்து பணத்தைசேர்க்கணும் 
மனைவிமக்கள் தான்மகிழ வாழ்ந்துகாட்டணும் -தெய்வத்திடம் 
மண்டியிட்டு தண்டம் செய்து மன்னிப்பு கோரணும். 

கவிதை ஆக்கம் 
திரு முகவை முத்துக்கருப்பன் ராமநாதபுரம் 
1997 ஆம் ஆண்டு சமுதாய மடல் பத்திரிக்கைக்கு எழுதியது 

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது 144 தடை உத்தரவால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பின்னடைவு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட பணத்தட்டுப்பாடு முடிதிருத்தும் திறனாளிகளின் குடும்பங்கள் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசு...

வேதை க வைரப்பன்