Posts

வேதை க வைரப்பன்

Image
தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உப்புக்கு பெயர் பெற்ற வேதாரண்யத்தில் 1930ல் நடந்த சம்பவம் இது. அப்போது சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. பொதுமக்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்களையும் அவர்களது எடுபிடிகளையும் புறக்கணித்து வந்த நேரம் அது. 1930ம் ஆண்டு ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டம் அந்தப் பகுதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. உப்பு காய்ச்ச தடைவிதித்த ஆங்கிலேயே அரசுக்கும், அவர்களது பணியாளர்களுக்கும் உதவிகள் எதுவும் செய்வதில்லை என்று மக்கள் தாங்களுக்குள்ளாகவே ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொண்டனர். அப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் #கே.#வைரப்பன் என்ற முடி திருத்துபவரிடம் முடி திருத்த வந்தார். #கே.#வைரப்பன் ஆங்கிலேயர்களுக்கும், அவர்களது பணியாளர்களுக்கும் முடி திருத்துவதில்லை என்று உறுதி பூண்டிருந்தார். முடி திருத்தும் வேலை நடந்து கொண்டிருந்தது. பேச்சுவாக்கில் அவர் ஒரு கான்ஸ்டபிள் என்ற உண்மை, 24 வயதான வைரப்பனுக்குத் தெரிந்தது. பாதி சவரம் செய்த நிலையில் அந்தக் கான்ஸ்டபிளுக்கு சவரம் செய்ய மறுத்து விட்டார். ...

2006 ஆம் ஆண்டு தியாகி வைரப்பன் அவர்களுடைய நினைவுத்தூண் அன்றைய நமது சமுதாய மாத இதழான பண்டிதம் இதழில்அன்றைய வேதாரண்யம் ஒன்றிய துணை செயலாளராக இருந்த T.R. ரவிக்குமார் அந்த நினைவுத்தூணை புகைப்படம் எடுத்து பண்டிதம் இதழில் முதல் பக்க அட்டை படமாக வருவதர்க்கு பத்திரிக்கை ஆசிரியர் தங்கவேலிடம் கூறி இந்த புகைப்படத்தைஆசிரியர் தங்கவேல் பண்டிதம் இதழில் வெளியிட்டார்......மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவரும்,மக்கள் தலைவருமான ஜி.கே.மூப்பனார் அவர்களின் முயற்சியால் 1998 ஆம் ஆண்டு இந்த நினைவுத்தூண் எழுப்பபட்டுள்ளது.......

Image

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக கொரானா தொற்று நோய் காரணமாக பாதிப்படைந்துள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க தமிழக அரசு ஆனையிட்டது. 65நாட்கள் கடந்தும் விரைந்து வழங்காததை கண்டித்து 24/07/2020அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

Image

மருத்துவர் சமுதாயத்திர்க்கு ஏழு சதவீத உள் ஒதிக்கீடு கோரி சென்னையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்திர்க்கு பிறகு அதற்க்கான26.9.2006 அன்று 9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அன்றைய முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர் நமது மாநில சங்க நிர்வாகிகள்....மனுவை அன்றைய மாநில ஆளுநராக இருந்த சுர்ஜித்சிங்பர்னாலா அவர்களிடம் மாநில தலைவர் நடேசன் உள்ளிட்ட மாநில பொருப்பாளர்கள் மற்றும் அன்றைய தினம் மாநில பொருளாலராக இருந்த கம்பம் ஏ.ராஜன் மாநில பொது செயலாளராக இருந்த பாக்கியநாதன் ஆகியோர் மனுவை வழங்கினர்......

Image

மதுரை மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் நிர்வாகிகள்

Image

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நாகை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் அன்று கலந்து கொண்ட மாநில நிர்வாகிககள் ஒரத்தநாடு ஆசைத்தம்பி மாநில இளைஞரனி செயலாளர் மற்றும் M.S.Pபன்னீர்செல்வம் மாநில துனணத் தலைவர் மற்றும் வேதாரண்யம் கேசவன் இவர்கள் மறைந்தாலும் இவர்களின் நினைவுகள் மறையவில்லை......😔😔

Image

2007 ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)பட்டியலிலிருந்து தனியாக மூன்று சதவீத இட ஒதிக்கீடு கோரி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அன்றைய நாகை மாவட்ட நலவாரிய பிரிதிநிதியாக இருந்த வேதை சுப. ராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

Image